பழநி: பழநி மலைக்கோயிலில் வருடாபிஷேகத்தை முன்னிட்டு சிறப்பு யாகபூஜை நடந்தது. பழநி மலைக்கோயில் பாரவேல் மண்டபத்தில் யாகசாலை அமைக்கப்பட்டு புனிதநீர் நிரம்பிய கலசங்கள் வைத்து, கணபதிஹோமம், ஸ்கந்தயாகம் மற்றும் வேதமந்திரங்கள் முழங்க வருடாபிஷேக சிறப்பு யாகபூஜை நடந்தது.
உச்சிகாலபூஜையில் மூலவர் ஞான தண்டாயுதபாணிக்கு புனித கும்பநீர் அபிஷேகம், சிறப்பு அர்ச்சனை, மகா தீபாராதனை நடந்தது. சுபமூகூர்த்த தினத்தையொட்டி புதுமண தம்பதிகள் உட்பட ஏராளமான பக்தர்கள் மூலவர் ஞானதண்டாயுதபாணி சுவாமியை தரிசனம் செய்தனர்.