பதிவு செய்த நாள்
12
ஏப்
2016
12:04
பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே ஜக்கார்பாளையம் ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஆதிபெருமாள் கோவிலில், மகா கும்பாபிஷேக விழா நேற்று நடந்தது. ஆயிரகணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.
பொள்ளாச்சி அருகே கிணத்துக்கடவு தாலுகா ஜக்கார்பாளையத்தில், பழமை வாய்ந்த ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஆதிபெருமாள் கோவிலில், கும்பாபிஷேக விழா கடந்த 9ம் தேதி மாலை, 4:00 மணிக்கு முதற்கால பூஜை உள்ளிட்ட சிறப்பு பூஜைகளுடன் துவங்கியது. நேற்றுமுன்தினம் காலை, 8:00 மணிக்கு இரண்டாம் கால பூஜை, அனுக்ஞை, பூர்ணாகுதி, சாற்றுமுறைகள், தீர்த்த பிரசாதம் வழங்குதல் நிகழ்ச்சியும், காலை, 8:30 -10:30 மணிக்குள் கோவிலுக்கு முளைப்பாரி எடுத்து வருதல், மாலை, 4:00 மணிக்கு உபன்யாச நிகழ்ச்சியும் நடந்தது. தொடர்ந்து, மாலை, 5:00 மணிக்கு மூன்றாம் கால பூஜை, இரவு, 7:00 மணிக்கு சத்சங்கம் நிகழ்ச்சியும் நடைபெற்றது. நேற்று, காலை, 7:00 மணிக்கு நான்காம் கால பூஜை, காலை, 9:00 மணிக்கு மேல் 10:00 மணிக்குள் மகா கும்பாபிஷேகம், காலை, 10:00 மணி முதல் அன்னதானம் நிகழ்ச்சியும் நடந்தன. ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.