பதிவு செய்த நாள்
12
ஏப்
2016
12:04
வாலாஜாபாத்: கோடை காலம் துவங்கி இருப்பதால், கோவில் வளாக நடைபாதைகளில், தரை விரிப்பான் மற்றும் வாட்டர் பெயின்ட் அடிக்க வேண்டும் என, செயல் அலுவலர்களுக்கு, இந்து சமய அறநிலையத்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில், மாவட்டம் முழுவதும், 1,500க்கும் மேற்பட்ட கோவில்கள் உள்ளன. இதன் உதவி ஆணையர், அந்தந்த பகுதி செயல் அலுவலர்களுக்கு பிறப்பித்துள்ள உத்தரவு: கோவில்களுக்கு வரும் பக்தர்களுக்கு, கோடை வெயில் தாக்காமல் இருக்க, பக்தர்கள் நடந்து செல்லும் பாதையில், தரை விரிப்பான் விரிக்க வேண்டும். சூடு அதிகம் தெரியாத வகையிலான, வாட்டர் பெயின்ட் பூச வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, காஞ்சிபுரம் அடுத்த, கோவிந்தவாடி அகரம் கைலாசநாதர் மற்றும் தட்சிணாமூர்த்தி கோவில் வளாகத்தில், நன்கொடையாளர் உதவியுடன், 3 அடி அகலம், 120 அடி நீளத்தில் தரை விரிப்பான் போடப்பட்டு உள்ளது.