காரைக்கால் வரதராஜபெருமாள் கோவிலில் திருக்கல்யாண உற்சவம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
12ஏப் 2016 12:04
காரைக்கால்: மேலகாசாக்குடி வரதராஜபெருமாள் கோவிலில் ஸ்ரீதேவி,பூதேவி சமேத வரதராஜப்பெருமாள் சுவாமிக்கு திருக்கல்யாணம் நடந்தது.
காரைக்கால் நெடுங்காடு கொம்யூன் மேலகாசாக்குடியில் உள்ள வரதராஜ பெருமாள் கோவில் பழமை வாய்ந்த திருக்கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் கும்பாபிஷேக நிறைவு பெற்று மூன்றாம் ஆண்டு துவக்கத்தை யொட்டி ஸ்ரீதேவி,பூதேவி சமேத வரதராஜ் பெருமாளுக்கு திருக்கல்யாணம் நடந்தது. முன்னதாக காலை 8 மணிக்கு சம்பத்ரா அபி ஷேக ஹோமம் நடந்தது. இந்நிகழ்ச்சியில் விழா உபயதாரர் இளங் கோவன்,கோவில் அர்ச்சகர் நீலமேக பட்டாச்சாரியார் மற்றும் தேவஸ்தான அதி காரி, விழா குழுவினர், மேலகாசாக்குடி கிராம வாசிகள் கலந்து கொண்டனர்.