சிவகாசி மாரியம்மன் கோயிலில் கயர்குத்து அக்னி சட்டி ஏந்தி பக்தர்கள் நேர்த்தி கடன்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
12ஏப் 2016 12:04
சிவகாசி: சிவகாசி மாரியம்மன் கோயிலில் நடந்த கயர்குத்து விழாவில் அக்னி சட்டி ஏந்தி ஏராளமான பக்தர்கள் நேர்த்தி கடன் செலுத்தினர்.
இக்கோயில் பங்குனி பொங்கல் விழா ஏப்., 3ல் கொடியேற்றத்துடன் துவங்கியது. விழா நாட்களில் அம்மன் பல்வேறு அலங்காரத்தில் ரத வீதிகளில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்து வருகிறார். எட்டாம் நாள் விழாவான நேற்று முன்தினம் விமரிசையாக கொண்டாடப்பட்டது.அன்று காலை முதல் பக்தர்கள் பொங்கலிட்டு வழிபட்டு அம்மனை தரிசித்தனர்.
அம்மன் குதிரை வாகனத்தில் முப்பிடாரி அம்மன் கோயில் முன் வேட்டைக்கு செல்லுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. 9 ம் நாளான நேற்று பக்தர்கள் வேண்டுதலை நிறைவேற்ற அம்மனுக்கு அக்னி சட்டி எடுத்தும், கயர் குத்து, முடிக்காணிக்கை செலுத்தி, முத்துகாணிக்கை, மாவிளக்கு, தவழும் பிள்ளை ஆகிய நேர்த்திக்கடன் செலுத்தினர். அம்மன் சிறப்பு அலங்காரத்தில் மண்டகபடியில் அருள் பாலித்தார். 10 ம் நளான இன்று தேரில் அம்மன் எழுந்தருள தேரோட்டம் நடக்கிறது. ஏற்பாடுகளை சிவகாசி இந்து நாடார்கள் உறவின்முறை மகமை பண்டு நிர்வாகிகள் செய்கின்றனர்.