மாணவர்களுக்கு ஸ்பெஷல் நியூஸ் மாணவர்கள் விளையாட வேண்டிய நேரத்தில் விளையாட வேண்டும். மற்ற நேரங்களில் நன்றாகப் படிக்க வேண்டும். அவ்வாறு, படிக்காவிட்டால் அந்த விளையாட்டே எதிர் காலத்தில் அவர்களுக்கு வினையாகி விடும். இதனால் தான் விநாயகர் யானை முகத்தோடு திகழ்கிறார். காரணம் என்ன தெரியுமா? யானை தெருவில் வந்தால் விளையாட்டாக இருக்கும். அதுவே, சற்று மிரண்டு விட்டால் தூக்கி பந்தாடி விடும். விளையாட்டு வினையானது என்று இதைத்தான் குறிப்பிடுகின்றனர். எனவே, விநாயகரை வணங்கும் மாணவர்கள் ஏதோ விடலை போட்டால் விநாயகர் தங்களை பாஸ் பண்ண வைத்து விடுவார் என்று அசட்டையாக இருந்து விடக்கூடாது. அவர் நிறைய மார்க் வாங்கித் தருவார் என்ற நம்பிக்கையோடு தீவிரமாக படிக்கவும் வேண்டும். யானை முகத்தைப் பார்க்கும் போதெல்லாம், அதை ரசிப்பதோடு நின்று விடாமல், நன்றாக படிக்கவும் வேண்டும் என்ற நினைவும் வர வேண்டும்... புரிகிறதா!