அர்க் என்ற சொல்லே தமிழில் எருக்கு ஆகியுள்ளது. விநாயகருக்கு உகந்த மலர் எருக்கமலர். அர்க் என்ற சொல்லில் இருந்தே அர்க்கன் என்ற சொல்லும் உருவாகியுள்ளது. அர்க்கன் என்றால் சூரியன். சூரியனார்கோயிலில் எருக்கஞ்செடி தான் தல விருட்சம். எருக்கு இலையில் தயிர்சாதம் வைத்து சாப்பிட்டால் தொழுநோய் குணமாகும் என்கிறது இந்தக் கோயிலின் வரலாறு. நவக்கிரகங்களுக்கே ஒருமுறை குஷ்டநோய் ஏற்பட்டது. தங்கள் தோஷம் தீர, சூரியனார்கோவில் அருகிலுள்ள மங்கலக்குடி சிவனை வணங்க அவை வந்தன. அவரது உத்தரவுப்படி, அருகிலுள்ள சூரியனார்கோயிலில் தங்கி, எருக்கம் இலையில் தயிர்சாதம் சாப்பிட்டு நோய் நீங்கப்பெற்றன. இந்த செடியில் பூக்கும் மலர்கள் விநாயகருக்கு உகந்தவை ஆயின.