பதிவு செய்த நாள்
15
ஏப்
2016
12:04
பொள்ளாச்சி: தமிழ் புத்தாண்டை முன்னிட்டு, பொள்ளாச்சி சுற்றுவட்டார கோவில்களில் நடந்த சிறப்பு பூஜையில், பக்தர்கள் திரளாக பங்கேற்றனர். பொள்ளாச்சி கரிவரதராஜப் பெருமாள், சுப்ரமணிய சுவாமி, ஜோதிநகர் விசாலாட்சி அம்மன் உடனமர் ஜோதிலிங்கேஸ்வரர், மகாலிங்கபுரம் சாய்பாபா, டி.கோட்டாம்பட்டி ராஜீவ் நகர் கணபதி, பூமாதேவி, கருப்பண்ணசாமி உட்பட சுற்றுவட்டார கோவில்களில், சிறப்பு பூஜை நடந்தன.
* கிணத்துக்கடவு அருகே, பட்டணத்து மாரியம்மன் கோவிலில், ஒட்டு மொத்த கிராமமே பங்கேற்ற சிறப்பு பூஜை நடந்தது. அபிஷேகம் நடத்தி, அன்னதானமும் வழங்கப்பட்டது. கடந்த ஐந்தாண்டுகளாக, இங்கு அன்னதானம் நடப்பது குறிப்பிடத்தக்கது. தேவணாம்பாளையத்தில், நாகதெய்வத்துக்கு சிறப்பு வழிபாடு நடந்தது. பால்குட ஊர்வலத்தில், கிராமத்தை சுற்றி, பெண்கள் வலம் வந்தனர்.
* வால்பாறை சுப்ரமணிய சுவாமி, அண்ணாநகர் முத்துமாரியம்மன் வாழைத்தோட்டம் எம்.ஜி.ஆர்.,நகர் மாரியம்மன், ஐயப்பன், காமாட்சியம்மன் உட்பட பல கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தன. திரளான பக்தர்கள் பங்கேற்று வழிபட்டனர்.