தஞ்சாவூர்: கும்பகோணத்தில் ராமநவமி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருத்தேரோட்டம் ராமசுவாமி ஆலயத்தில் இன்று நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துக்கொண்டு திருத்தேரின் வடம் பிடித்தனர்.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் ராமசுவாமி ஆலயத்தில் ராமர், சீதை, லெட்சுமணர், ஆஞ்சநேயர் ஆகியோர் பட்டாபிஷேக கோலத்தில் மூலவர்களாக உள்ளதால், தென்னகத்தின் அயோத்தி என்றழைக்கப்படுகின்றன. இந்த ஆலயத்தின் ராமநவமி பெருவிழா கடந்த 06ம் தேதி கொடியேற்றத்துடன் வெகு விமர்சையாக நடைபெற்றது. இதனை தொடர்ந்து ஒன்பதாம் நாள் விழாவாக இன்று காலை திருத்தேரோட்டம் நடைபெற்றது. அலங்கரிக்கப்பட்டிருந்த திருத்தேரில் ராமர், சீதை, லெஷ்மணன், ஆஞ்சனேயர் ஆகியோர் பட்டாபிஷேக கோலத்தில் திருத்தேரில் எழுந்தருளினார்கள். பின்னர் ஏராளமான பக்தர்கள் திருத்தேரின் வடம்பிடித்து முக்கிய வீதிகள் வழியாக இழுத்துச் சென்றனர்.இதில் நுாற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்துக்கொண்டனர். பத்தாம்நாள் விழாவாக நாளை புஷ்பயாகம் மற்றும் சப்தாவர்ணமும், நாளை மறுநாள் விடையாற்றியுடன் ராமநவமி விழா நிறைவு பெறுகிறது.