பதிவு செய்த நாள்
15
ஏப்
2016
05:04
கோவை: ராம்நகர் கோதண்டராமசுவாமி கோவிலில் ராமநவமி விழா கோலாகலமாக நடந்தது. ஏராளமான பக்தர்கள் வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர். சித்திரை மாதம் நவமி திதியில் ராமர் அவதரித்தார். அன்றைய தினம் ஸ்ரீராமநவமி விழாவாக பக்தர்களால் கொண்டாடப்படுகிறது.
கோதண்டராமர் கோவிலில், ஏப்., 6 முதல் அன்றாடம் காலை 7:00 மணி முதல் 8:00 மணி வரையும், மாலை 6:00 மணி முதல் 8:00 மணி வரை ஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் மூல பாராயணத்தை கிடாம்பி நாராயணன் நடத்தினார். ஏப்., 10 அன்று, ஏகதின லட்சார்ச்சனையும், ஏப்.,13 ல் சீதாராமர் திருக்கல்யாண உற்சவமும், ஏப்., 14 ல் பகவத்கீதை சொற்பொழிவு நடந்தது. காலை 4:00 மணிக்கு மூலவரான சீதாராமருக்கு சிறப்பு திருமஞ்சனமும், காலை 8:00 மணிக்கு ப்ரவசனமண்டபத்தில் பக்தர்களுக்கு சிறப்பு சுவாமி தரிசனமும், மாலை சுவாமி திருவீதி உலாவும் நடந்தது. கோவிலுக்கு வந்த பக்தர்களுக்கு, நீர்மோர், பாணக்கம், பொங்கல் ஆகியவை பிரசாதமாக வழங்கப்பட்டது. ஏராளமான பக்தர்கள் நேற்று நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர். இதே போல் கோவையிலுள்ள பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடுகளும், சிறப்பு அன்னதானமும் நடந்தன. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.