காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோவில் சித்திரை உத்திர திருவிழா நேற்று கோலாகலமாக துவங்கியது. முதல் நாள் காலை, பவழகால் சப்பர வாகனத்தில் சுவாமி ராஜ வீதிகளில் வலம் வந்து அருள்பாலித்தார். காஞ்சிபுரத்தில் பிரசித்தி பெற்ற கச்சபேஸ்வரர் கோவில் சித்திரை திருவிழா ÷ நற்று காலை, 6:00 மணிக்கு கொடியேற்றத்துடன் துவங்கியது. அதை தொடர்ந்து, காலை, 7:00 மணிக்கு, சுந்தராம்பிகை மற்றும் கச்சபேஸ்வரர், பவழகால் சப்பர வாகனத்தில் நான்கு ராஜ வீதிகளில் வலம் வந்தனர். இரவு, 7:00 மணிக்கு சிம்ம வாகனத்தில் சுவாமி ஊர்வலம் நடைபெற்றது. காலை கொடியேற்ற நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.