பதிவு செய்த நாள்
16
ஏப்
2016
11:04
உடுமலை: உடுமலை சாய்பாபா கோவிலில், ராமநவமியையொட்டி நடந்த சீதாராம திருக்கல்யாணம் உற்சவத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். ராமநவமியை முன்னிட்டு, காலை, 7:30 மணிக்கு மங்கள இசை, சாய்பாபாவிற்கு சிறப்பு அபிேஷக ஆராதனை நடந்தன. காலை, 11:00 மணி முதல், மதியம், 12:00 மணி வரைக்கும், ராமநாம சங்கீர்த்தனமும், விஷ்ணுசகஸ்ரநாமம் பாராயணம் மற்றும் சாயி சத்சரிதம் பாராயணம் படிக்கப்பட்டது. மதியம், 12.30 மணிக்கு, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை, 6:30 மணிக்கு, சீதாராமர் திருக்கல்யாணம் நடந்தது.