பதிவு செய்த நாள்
18
ஏப்
2016
12:04
செவ்வாய்பேட்டை: செவ்வாய்பேட்டை மீனாட்சி சுந்தரேஸ்வரருக்கு, இன்று திருக்கல்யாண வைபவம் நடக்கிறது. செவ்வாய்பேட்டை, மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில், சித்திரை பிரம்மோத்சவ விழா முகூர்த்தக்கால், கடந்த, 7ம் தேதி நடப்பட்டது. அதையடுத்து, 12ம் தேதி காலை, 9 மணிக்கு கொடியேற்றத்துடன், விழா துவங்கியது. தொடர்ந்து, காலை, மாலையில் அம்மனுக்கு விசேஷ பூஜை செய்து, சிறப்பு வழிபாடு நடந்துவந்தது. இன்று, திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது. காலை, 6 மணிக்கு மேல் விசேஷ மற்றும் யாகசாலை பூஜை, மதியம், 12 மணிக்கு மீனாட்சி திருக்கல்யாண உற்சவம் நடக்கும். 25ம் தேதி காலை, 10 மணிக்கு ருத்ராபிஷேகம், விடையாற்றி உற்சவம், மதியம், 1 மணிக்கு விசேஷ பூஜையுடன் விழா நிறைவடையும்.