மருக்காலங்குளம் வடகாசி அம்மன் கோயிலில் வருஷாபிஷேக விழா துவக்கம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
31ஆக 2011 11:08
தேவர்குளம் : மருக்காலங்குளம் வடகாசி அம்மன், காளீஸ்வரி அம்மன் கோயில் வருஷாபிஷேக விழா இன்று(31ம் தேதி) துவங்குகிறது. நெல்லை மாவட்டம் மருக்காலங்குளத்தில் வடகாசி அம்மன் காளீஸ்வரி அம்மன் மற்றும் பரிவார தெய்வங்கள் அருள் பாவித்து வருகின்றனர். கடந்த ஆண்டில் இக்கோயிலில் பல்வேறு திருப்பணிகள் நடந்து அஷ்ட பந்தன மகா கும்பாபிஷேகம் வெகு விமரிசையாக நடந்தது. இதனை தொடர்ந்து முதலாவது வருஷாபிஷேக விழா இன்று (31ம் தேதியும்) நாளை (1ம் தேதி) இரு தினங்கள் நடக்கிறது. இன்று மாலை 4மணிக்கு கணபதிஹோமம், நவக்கிரஹஹோமம், வாஸ்து சாந்தி, பிரவேச பலி தீபாராதனை பூஜைகள் நடக்கிறது. இரவு 8மணிக்கு மகா பிரதியங்ராஹோமம், மகா வருணஹோமம், மகாபைரவர் ஹோமம் 10 மணிக்கு நகைச்சுவை இசைப்பட்டி மன்றம் நடக்கிறது. இரண்டாம் நாள் நிகழ்ச்சியாக நாளை(1ம் தேதி) விக்னேஷ்வர பூஜை, புன்யாசவானம், பஞ்சகவ்யம் மற்றும் பூஜைகள், காலை 7.30 மணிககு மேல் 8.40 க்குள் விமான கோபுரம் அம்மன்களுக்கு அபிஷேகம் நடக்கிறது. மற்றும் பரிவார தெய்வங்களுக்கும் பூஜைகள் நடக்கிறது. மதியம் 12 மணிக்கு அலங்கார பூஜை, பிரசன்ன பூஜை, அன்னதானம் நடக்கிறது. வருஷாபிஷேகம் விழா ஏற்பாடுகளை மருக்காலங்குளம் ஊர் பொதுமக்கள் செய்துள்ளனர்.