பதிவு செய்த நாள்
31
ஆக
2011
11:08
கடையநல்லூர் : கடையநல்லூர் கிருஷ்ணாபுரம் மகாராஜ கணபதி கோயிலில் 1ம் தேதி மகா கும்பாபிஷேகம் நடக்கிறது. தமிழுக்கு செயற்கரிய அரும்பெரும் தொண்டாற்றிய அவ்வையார் மகாராஜ கணபதியை வணங்கியதாக வரலாறு குறிப்பிடுகிறது. அதே பெயரிலேயே கடையநல்லூர் கிருஷ்ணாபுரம் மகாராஜபுரம் தெருவில் மகாராஜ கணபதி அருள்பாவித்து வருகிறார். இந்த கோயிலில் 1ம் தேதி கும்பாபிஷேகம் நடக்கிறது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, இன்று (31ம் தேதி) மாலை அனுக்ஞை விக்னேஷ்வர பூஜை, கும்ப அலங்காரம், யாகசாலை பிரவேசம், முதற்கால யாகசாலை பூஜை, ஹோமம், தீபாராதனை நடக்கிறது. அதிகாலை 5 மணிக்கு இரண்டாம் கால யாகசாலை பூஜை, ஹோமம், பூர்ணாகுதி, தீபாராதனை ஆகியன நடக்கிறது. தொடர்ந்து கடம்புறப்பாடு நடக்கிறது. காலை 7.35 மணிக்கு அஷ்டபந்தன கும்பாபிஷேகமும், தொடர்ந்து மகாராஜ கணபதிக்கு மகா கும்பாபிஷேகமும் நடக்கிறது. தொடர்ந்து மகா அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை நடக்கிறது. ஏற்பாடுகளை திருப்பணி விழாக்குழுவினர், இளைஞர் அணியினர் மேற்கொண்டுள்ளனர்.