பதிவு செய்த நாள்
21
ஏப்
2016
11:04
திருத்தணி : திருத்தணி முருகன் கோவிலில் நடந்து வரும் பிரம்மோற்சவ விழாவில், தெய்வானை அம்மன் திருக்கல்யாணம் நேற்று முன்தினம் இரவு நடந்தது. திருத்தணி, முருகன் கோவிலில், சித்திரை மாத பிரம்மோற்சவ விழா, கடந்த, 12ம் தேதி, கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவின், எட்டாம் நாளான, நேற்று முன்தினம், காலை 9:30 மணிக்கு, உற்சவர் முருகப் பெருமான், வள்ளி தெய்வானையுடன் சிறப்பு அலங்காரத்தில், யாளி வாகனத்தில் எழுந்தருளி, மாடவீதியில் ஒரு முறை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.இரவு 7:00 மணிக்கு, உற்சவர் பெருமான் குதிரை வாகனத்தில் வலம் வந்தார். இரவு 8:00 மணிக்கு, உற்சவர் முருக பெருமானுக்கும், தெய்வானை அம்மனுக்கும் திருக்கல்யாணம் நடந்தது. இதில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.நேற்று, காலை 9:30 மணிக்கு, கேடய உலா உற்சவமும், மாலை 5:00 மணிக்கு, கந்தபொடி விழாவும், இரவு 8:00 மணிக்கு, உற்சவர் சண்முகர் உற்சவமும் நடந்தது. இன்று, உற்சவர் அபிஷேகத்துடன், பிரம்மோற்சவ விழா கொடி இறக்கத்துடன் நிறைவு பெறுகிறது.