Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
விநாயகருக்குரிய 11 விரதங்கள்! விநாயகர் மெனு!
முதல் பக்கம் » சதுர்த்தியில் விநாயகர் வழிபாடு!
தெய்வங்களே வழிபடும் கணநாதன்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

31 ஆக
2011
01:08

எந்த ஒரு காரியமானாலும், கணபதியை நினைந்து வழிபடத் தொடங்கினால் அவை வெற்றியடையும் என்பர். இவ்வகையில் தெய்வங்களேகூட கணபதியை வழிபட்டிருக்கிறார்கள். அப்படிப்பட்ட சில புராண நிகழ்வுகளைக் காண்போம். திருபுர அசுரர்களை அழிப்பதற்காகப் புறப்பட்ட சிவனார், கணபதியை வழிபட்டு வர மறந்துவிட்டார். விளைவு- சிவனார் சென்ற தேரின் அச்சு செங்கல்பட்டுக்கு அருகில் அச்சு முறிந்து நின்றது. ஏன் இந்தத் தடை என யோசித்தவருக்கு, கணபதியை வணங்காமல் வந்த விவரம் புரிந்தது. உடன் அச்சு முறிந்த இடத்திலேயே விநாயகரை பிரதிஷ்டித்து வழிபட்டார். முறிந்த அச்சு இணைந்தது. சிவன் தேரின் அச்சு முறிந்த இடமே அச்சிறுப்பாக்கம் ஆனது. சிவனார் வழிபட்ட அந்த விநாயகர் கோயில் இன்றும் உள்ளது.  முருகன் தன் அண்ணன் விநாயகரை வழிபட்டு அவரிடமிருந்து மயில் வாகனமும் பல வரங்களும் பெற்ற திருத்தலம் மயூரேசம் எனப்படுகிறது. இத்தலம் கிருஷ்ணை ஆற்றின் வடகரையில் அமைந்துள்ளது. மேலும் வள்ளியைக் கைப்பிடிக்க வேலவனுக்கு ஏற்பட்ட பல தடைகளைத் தன் அண்ணன் மூலமாகவே போக்கிக் கொண்டார். இச்சமயம் கணபதி யானை உருவில் வந்து வள்ளியைப் பயமுறுத்த, அவர் வேலவனைக் கட்டியணைத்துக்கொண்டார். இந்த விநாயகர், தணிகைமலைமீது அமைந்துள்ள திருக்கோயிலில் வீற்றிருக்கிறார். இவரை ஆபத்சகாய விநாயகராக வழிபடுகிறார்கள்.

திருமால் பாஞ்சஜன்யம் சங்கைப் பெறுவதற்காக சிவனை நோக்கித் தவமிருந்தார். அவர்முன் தோன்றிய ஈசன், அத்திகிரியிலுள்ள வலம்புரி விநாயகரை வழிபட்டால், பாஞ்சஜன்யத்தை அடையலாம் என்று வழிகாட்டினார். திருமாலும் அவ்வாறே செய்து அந்தச் சங்கினைப் பெற்றார். காஞ்சி ஏகாம்பரேஸ்வரர் கோயிலிலுள்ள சக்கர விநாயகரையும் திருமால் வழிபட்டு சக்கரத்தைப் பெற்றிருக்கிறார். இந்திரன் வழிபட்ட செங்கழுநீர் விநாயகர் ஆலயம், திருத்தணியில் சரவணப் பொய்கையின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ளது. இவரை வழிபட்டு இழந்த செல்வங்கள் அனைத்தையும் இந்திரன் பெற்றான். சுவாமிமலைக்கு அருகிலுள்ள திருவலஞ்சுழியில் வெள்ளைப் பிள்ளையார் அருள்பாலிக்கிறார். கடல் நுரையால் உருவான இப்பிள்ளையார் இந்திரனால் பிரதிஷ்டை செய்யப்பட்டவர். இவருக்கு பச்சைக் கற்பூரம் சாற்றி வழிபடுவார்கள். மேலும், இந்திரன் கௌதம மகரிஷியின் சாபத்திலிருந்து விமோசனம் பெற தேவகுரு இந்திரனுக்கு கணபதியின் ஆறு எழுத்து மந்திரத்தை உபதேசித்தார். அதன்படி இந்திரன் வழிபட்டு சாப விமோசனம் பெற்ற கணபதியின் திருத்தலம் வேதாரண்யத்தில் அமைந்துள்ளது. இங்குள்ள விநாயகர் சிந்தாமணி விநாயகர் என்று அறியப்படுகிறார். ராமபிரான் தான் மேற்கொள்ளும் காரியம் வெற்றி பெற வேண்டும் என்று வேண்டிக்கொண்ட வெயிலுகந்த விநாயகரின் ஆலயம். ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானையிலிருந்து தேவிப்பட்டினம் செல்லும் வழியிலுள்ள உப்பூரில் அமைந்துள்ளது. சூரிய பகவானும் இத்தல விநாயகரை வழிபட்டு பல வரங்கள் பெற்றுப் பலன் அடைந்தார். ராவணனைக் கொன்று வெற்றிபெற்ற பிறகு, வேதாரண்யம் திருத்தலத்திலுள்ள விநாயகரை வணங்கிய பிறகே ராமரைப் பீடித்திருந்த வீரஹத்தி தோஷம் நீங்கியது. எனவே வேதாரண்யம் தலத்திலுள்ள விநாயகருக்கு வீரஹத்தி விநாயகர் என்ற திருநாமம் வழங்கப்படுகிறது.

ஐயப்ப சாஸ்தா கோயில் கட்டி வழிபட்ட விநாயகரின் திருத்தலம் நாகை மாவட்டம், தரங்கம்பாடி வட்ட சிற்றூரான சாத்தனூரில் அமைந்துள்ளது. இங்குள்ள விநாயகரை பாசிகுளத்து விநாயகர் என்று போற்றுகிறார்கள். ஐயப்ப சாஸ்தா எண்ணிய காரியங்கள் ஈடேறாமல் தடை ஏற்பட்டு வந்ததால், தனக்கேற்பட்ட தடைகளைக் களையும்படி விநாயகரைத் தியானித்தார். விநாயகரும் ஐயப்ப சாஸ்தாவுக்கு முதலில் அக்னி ரூபமாகக் காட்சியளித்தார். பின்னர் சுய ரூபத்தில் கணநாயகன் தரிசனம் தந்து, இனி, நீங்கள் தொடங்கும் அனைத்து காரியங்களும் தடங்கலின்றி நிறைவேறும் என வரம் கொடுத்தார். நான்காம் பிறையைப் பார்ப்பதால் ஏற்படும் இன்னல்களானது, விநாயகரை வழிபட்டால் நீங்கிவிடும் என்பார்கள். கண்ணபிரானும் ஒருமுறை இதுபோன்று ருக்மிணி கொண்டுவந்து கொடுத்த பாலின்மூலம் நான்காம் பிறையைப் பார்த்ததாலேயே பல சங்கடங்களுக்கு ஆளானார். இந்த சங்கடங்கள் நீங்க, விநாயகரை சங்கடஹர சதுர்த்திதோறும் முறைப்படி பூஜித்து நிவாரணம் பெற்றார். ஈசனைப் பிரிந்திருந்த அன்னை பார்வதியும், கார்த்திகை மாத சதுர்த்தியில் அருகம்புல்லின்மேல் விநாயகர் வடிவத்தை வைத்து பூஜித்து ஈசனை அடைந்தார். இந்த பூஜையை தூர்வா கணபதி பூஜை எனப் போற்றுவர்.  கும்பகோணம் அருகில் உள்ள சூரியனார்கோவிலில் உள்ள விநாயகருக்கு கோள் தீர்த்த விநாயகர் என்று பெயர். பிரம்மனின் சாபத்தால் ஏற்பட்ட நோய் நீங்க, நவக்கிரகங்கள் இந்த விநாயகரை வழிபட்டு குணம் பெற்றார்கள்.

 
மேலும் சதுர்த்தியில் விநாயகர் வழிபாடு! »
temple news
மூலாதாரத்திற்கு உரியவராக விளங்கும் விநாயகப்பெருமான் முழுமுதல் கடவுளாக விளங்குகிறார். இவரை வணங்கி ... மேலும்
 
temple news
விநாயகர் சதுர்த்தியன்று விநாயகரைப் போற்றி வழிபடுவதற்கு வசதியாக ஆதிசங்கரர் பாடிய கணேச ... மேலும்
 
temple news
பரமேஸ்வரனின் பிள்ளை, பார்வதியின் பிள்ளை என்றாலே அவர் விநாயகர் என்று தெரியும். ஆனால், இவரை பிள்ளை யார் ... மேலும்
 
temple news
மனிதர்கள் பிறந்த நேரத்தை வைத்து ஜாதகம் கணிப்பது போல கடவுளர்க்கும் ஜாதகம் உண்டு. ஆவணியில் பிள்ளையார் ... மேலும்
 
temple news
இறைவன் செய்யும் தொழில்கள் பஞ்சகிருத்யங்கள் எனப் பெயர் பெறும். அவை படைத்தல், காத்தல், அழித்தல், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar