Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சிங்கம்புணரியில் சித்ரா பவுர்ணமி ... கோடைத் திருநாள் உற்சவம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
உடுமலை மாரியம்மன் தேர்த்திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்
எழுத்தின் அளவு:
உடுமலை மாரியம்மன் தேர்த்திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்

பதிவு செய்த நாள்

23 ஏப்
2016
12:04

உடுமலை: உடுமலை மாரியம்மன் கோவில், தேர்த்திருவிழாவுக்கான கொடியேற்றம் நிகழ்ச்சி ஆயிரக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில் நேற்று நடந்தது. உடுமலையில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா, ஏப்., 12ல் நோன்பு சாட்டுதலுடன் துவங்கியது. ஏப்., 19ல் திருவிழா கம்பம் போடப்பட்டது. திருவிழா கம்பத்துக்கு தினமும் பக்தர்கள் மஞ்சள் நீர், தீர்த்தம் ஊற்றி வழிபட்டு வருகின்றனர். இதைத்தொடர்ந்து, நேற்று மதியம், 1:00 மணிக்கு, கோவில் செயல்அலுவலர் சங்கரசுந்தரேஸ்வரன் மற்றும் கோவில் பரம்பரை அறங்காவலர் ஸ்ரீதர் முன்னிலையில், தேர்த்திருவிழாவுக்கான கொடியேற்றப்பட்டது. இதையொட்டி, நேற்று காலை ேஹாமம் உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடந்தன. கொடிக் கம்பத்துக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. கம்பத்தில், மஞ்சள் துணியில், அம்மன் சிம்ம வாகனத்தில் காட்சி அளிப்பது போன்ற உருவம் பொறித்த கொடி ஏற்றப்பட்டது. திருத்தேருக்கு முகூர்த்தங்கால் பூஜை செய்யப்பட்டு, தேர் பராமரிப்பு பணி துவக்கப்பட்டது. பிற்பகல், 3:00 மணிக்கு, பூவோடு எடுத்தல் துவங்கியது. பூவோடு துவக்க விழாவில், பக்தர்கள் பூவோடு ஏந்தி அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தி, வழிபட்டனர். நேற்று முதல் அம்மன் வீதியுலா செல்லும் நிகழ்ச்சி துவங்கியது. முதல் நாளான நேற்று, காமதேனு வாகனத்தில் புஷ்ப அலங்காரத்தில் அம்மன் வீதியுலா வந்து அருள்பாலித்தார். கோவில் கலையரங்கில் இன்று மாலை, 6:00 மணிக்கு, ஆன்மிக பேரவை சார்பில், இன்னிசை நிகழ்ச்சியும், குட்டைத்திடலில் இன்று இரவு, 10:00 மணிக்கு, இன்னிசை நிகழ்ச்சியும் நடக்கின்றன.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: சித்திரை திருவிழாவின் முத்தான நிகழ்வாக, தங்கக்குதிரை வாகனத்தில் எழுந்தருளிய கள்ளழகர், ... மேலும்
 
temple news
மானாமதுரை: மானாமதுரை வீர அழகர் கோயில் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான வீர அழகர் வைகை ... மேலும்
 
temple news
பரமக்குடி: ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயில் சித்திரை திருவிழாவில் பெருமாள் ... மேலும்
 
temple news
தேனி; போடிநாயக்கனூர் கொட்டகுடி ஆற்றில் ஸ்ரீரங்கம் வைணவ முறைப்படி செவ்வாய்க்கிழமை தமிழ் புத்தாண்டு ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை: சித்ரா பவுர்ணமி நேற்று இரவு தொடங்கி, இன்று வரைக்கும் உள்ளது. இதனால் திருவண்ணாமலையில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar