பதிவு செய்த நாள்
26
ஏப்
2016
12:04
ராசிபுரம்: ராசிபுரம், காளியம்மன் கோவில் சண்டி ஹோமம் நாளை மறுநாள் (28ம் தேதி) நடக்கிறது. ராசிபுரம், ரயில்வே ஸ்டேஷன் சாலையில் அமைந்துள்ள காளியம்மன் கோவில் கும்பாபிஷேகம், கடந்த, மார்ச், 11ம் தேதி நடந்தது. இதையொட்டி நாள்தோறும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள், ஆராதனைகள் நடந்தன. தெடர்ந்து, மண்டலாபிஷேகம் நிறைவு விழாவும், சண்டி ஹோமமும் நாளை மறுநாள் (28ம் தேதி) நடக்கிறது. இதற்கான நிகழ்ச்சிகள், நாளை மாலை (27ம் தேதி) 6 மணிக்கு துவங்கிறது. மறுநாள் (28ம் தேதி) காலை, 7 மணிக்கு கோ பூஜை, கன்யகா பூஜை, சுமங்கலி மற்றும் தம்பதி பூஜை உள்ளிட்ட சண்டி ஹோமங்கள் நடக்கின்றன.