சோழவந்தான்: சோழவந்தான் வேளார் தெரு உளுந்துார் காளியம்மன் கோயில் சித்திரை திருவிழா ஏப்.,19 ல் கொடியேற்றத்துடன் துவங்கியது.தினமும் சந்தனக்காப்பு அலங்காரத்தில் அம்மன் அருள்பாலிக்கிறார். நேற்றுமுன்தினம் வைகை ஆற்றில் புனிததீர்த்தம் எடுத்து பக்தர்கள் ஊர்வலமாக எடுத்து வந்து அம்மனுக்கு அபிஷேகம் செய்தனர். இரவு திருவிளக்கு பூஜை நடந்தது.நேற்று பூச்சொரிதல் நிகழ்ச்சி நடந்தது. ஏற்பாடுகளை விழா குழுத்தலைவர் சண்முகவேல், செயலாளர் தயாளன், பொருளாளர் அழகர்சாமி செய்திருந்தனர்.