பதிவு செய்த நாள்
02
மே
2016
11:05
உடுமலை: பள்ளபாளையம் சுடலை ஈஸ்வரன் கோவில் கும்பாபிேஷகம் மற்றும் 26ம் ஆண்டு கொடை விழா நடக்கிறது.உடுமலை, தளி ரோடு, பள்ளபாளையத்தில் அமைந்துள்ளது, சுடலை ஈஸ்வரன் கோவில். கோவில் கும்பாபிேஷக விழா மற்றும் 26ம் ஆண்டு கொடைவிழா இன்று மாலை, 6:00 மணிக்கு விநாயகர் பூஜையுடன் துவங்குகிறது.மாலை, 6:15 மணி முதல், ரக்ஷாபந்தனம், காப்பு கட்டுதல், பிரவேசபலி, கும்பஅலங்காரம், யாகசாலை பூஜை, தீபாராதனையும், இரவு, 9:00 முதல் 11:00 மணி வரை, குடிஅழைப்பு பூஜை, மகா தீபாராதனையும் நடக்கிறது. நாளை அதிகாலை, 5:00 மணிக்கு, கணபதி ேஹாமம், தீபாராதனையும், 8:00 மணிக்கு, தீர்த்தம் எடுத்து வருதலும், 9:00 மணிக்கு, கும்ப பூஜை, வேத பாராயணம், யாகசாலை துவக்கமும், 11:00 மணிக்கு, சுவாமி உறு ஏற்றுதல், தீபாராதனையும், காலை, 11:30 மணிக்கு, கும்பம் ஏற்றுதலை தொடர்ந்து மகா கும்பாபிேஷகம் நடக்கிறது.மதியம், 2:00 மணிக்கு, மகா அலங்காரம், மதிய கொடை விழா தீபாராதனையும், மாலை, 6:00 மணிக்கு, திருவிளக்கு பூஜையும், இரவு, 8:00 மணிக்கு கலை நிகழ்ச்சிகளும் நடக்கின்றன. நள்ளிரவு, 2:00 மணிக்கு, சுடலை ஈஸ்வரருக்கு கொடை விழா பூஜை நடக்கிறது. மே 4ம் தேதி அதிகாலை, 3:30 மணிக்கு, அக்னி குண்டம் இறங்குதலும், 4:00 மணிக்கு, அருள்வாக்கு வழங்குதலும், காலை, 7:00 மணிக்கு காப்பு கழற்றுதலுடன் விழா நிறைவடைகிறது.