கீழக்கரை: கீழக்கரை அருகே முனீஸ்வரத்தில் தர்ம முனீஸ்வரருக்கும் பரிவார தெய்வங்களான கருப்பணசுவாமி, மஞ்சகுல காளியம்மன், பனையடி ஐயா, முண்டன்சாமிக்கு மண்டலாபிஷேக சிறப்பு பூஜை நடந்தது. மூலவர்களுக்கு 18 வகையான அபிஷேகம், சந்தனக்காப்பு அலங்காரம் நடந்தது. பெண்கள் நெய் விளக்கேற்றியும், பொங்கல் வைத்தும் முனீஸ்வரரை வழிபட்டனர். ஏற்பாடுகளை திருப்பணிக்குழு செய்திருந்தனர்.