பதிவு செய்த நாள்
02
மே
2016
11:05
மகுடஞ்சாவடி: சித்தர்கோவிலில், சித்திரை திருவிழா நேற்று துவங்கியது. சேலம், இளம்பிள்ளை அருகே உள்ள சித்தர் கோவிலில், விநாயகர் திருவீதி உலாவுடன், நேற்று, சித்திரை திருவிழா துவங்கியது. அங்கு, இன்று இரவு, 11 மணியளவில், சித்தருக்கு சிறப்பு சந்தனகாப்பு அலங்காரம் மற்றும் அபிஷேகம் நடைபெற உள்ளது. நாளை மாலை, 3 மணிக்கு உருளுதண்டம், சிறப்பு அபிஷேகம் நடைபெறும். 4ம் தேதி, காளியம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், பூ மிதித்தல், 5ம் தேதி அதிகாலை, 4 மணிக்கு சத்தாபரணம், 6ம் தேதி, மஞ்சள் நீராட்டத்துடன் விழா நிறைவுபெறும்.