மஞ்சூர் : சக்தி மாரியம்மன் கோவிலில், வருடாந்திர பூஜை சிறப்பாக நடந்தது. மஞ்சூர் அடுத்துள்ள எடக்காடு கூட்டுறவு தேயிலை தொழிற்சாலை வளாகத்தில் உள்ள, சக்தி மாரியம்மன் கோவிலில், 55ம் ஆண்டு திருவிழா நடந்தது. அதில், அலங்கரிக்கப்பட்ட அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. பின் பக்தர்களுக்கான சிறப்பு பூஜையில், தொழிற்சாலையின் மேலாண்மை இயக்குனர், தலைவர், நிர்வாக குழு உறுப்பினர்கள், ஊழியர்கள், தொழிலாளர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.