புன்செய்புளியம்பட்டி: புன்செய்புளியம்பட்டி அருகேயுள்ள, எரங்காட்டுப்பாளையம் மாகாளியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நேற்று நடந்தது. விழாவையொட்டி, நேற்று காலை, 6 மணிக்கு விக்னேஷ்வர பூஜையுடன் இரண்டாம் கால வேள்வி துவங்கியது. தொடர்ந்து, யாக சாலையில் வேதிக அர்ச்சனை, சுவாமி ஆவாஹனம் நடந்தது. 8 மணிக்கு, நாடிசந்தனத்துடன், கலச வேள்வி பூஜை துவங்கியது. 9.30 மணிக்கு, சிவாச்சாரியார்கள் கோபுர கலசத்துக்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தினர். சுவாமிக்கு மகா அபிஷேகம், தீபாராதனை நடந்தது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.