பதிவு செய்த நாள்
05
மே
2016
01:05
திருப்பதி: திருமலையில், மூன்று நீர்த்தேக்கங்களை கட்ட தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.திருமலையில், கோகர்பம், பாபவிநாசம், குமாரதாரா பசுப்புதாரா, ஆகாசகங்கா என, ஐந்து நீர்த்தேக்கங்கள் உள்ளன. இவற்றில் சேமிக்கப்படும் நீர், திருமலையின் தேவைக்கு பயன்படுத்தப்படுகிறது. திருமலையில், மழை நீர் சேமிப்பு வசதி இல்லாததால், கன மழை பெய்யும் போது, மழை நீர் வீணாகிறது.இதையடுத்து, மழை நீரை சேமிக்க, மூன்று புதிய நீர்த்தேக்கங்கள் கட்ட, தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. இதற்கான இடங்களை, தேவஸ்தான அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.பாதை அமைப்புதிருமலையில் இருந்து, பாபவிநாசம் செல்லும் மார்க்கத்தில், பழமையான ஜபாலி தீர்த்தம் உள்ளது. இங்கு உள்ள குளத்தில் நீராடி, சுயம்பு ஆஞ்சநேயரை வழிபட்டால், நன்மை கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.அடர்ந்த வனப் பகுதியில் உள்ள, இந்த கோவிலுக்கு செல்ல, தேவஸ்தானம் படிகளை அமைத்துள்ளது. இருப்பினும், சில இடங்களில் நடந்து செல்ல, பக்தர்கள் சிரமப்படுகின்றனர். இதனால், மலை கற்களை கொண்டு, தேவஸ்தானம் பாதையை சீரமைத்து வருகிறது. மழையால், வனப் பகுதிக்குள் மலை கற்களை கொண்டு செல்லும் வழி அடைக்கப்பட்டது. தற்போது, நீர் வற்றியதால், பாதை அமைக்கும் பணி துவங்கியுள்ளது.