பதிவு செய்த நாள்
05
மே
2016
01:05
தானே :மஹாராஷ்டிராவில் உள்ள மூன்று கோவில்களில், பெண்கள், கவுன் அணிந்து வருவதற்கு, தடை விதிக்கப்பட்டு உள்ளது. மஹாராஷ்டிராவில், முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் தலைமையிலான, பா.ஜ., - சிவசேனா கூட்டணி ஆட்சி நடக்கிறது. இந்த மாநிலத்தில், சனி சிங்னானுார் கோவில், நாசிக்கில் உள்ள திரியம்பகேஸ்வரர் கோவில் ஆகிய வற்றில், பெண்கள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது; கோர்ட் தலையிட்ட பின், தடை நீக்கப்பட்டது. இந்நிலையில், மும்பையை அடுத்துள்ள தானே மாவட்டத்தில் உள்ள மூன்று கோவில்களில், பெண்கள், நைட்டி எனப்படும், கவுன் அணிந்து வருவதற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. தானே மாவட்டம், கோபர் பகுதியில் உள்ள, காம்தேவி, மகாதேவ், ஹனுமான் கோவில்களில் தான் இந்த தடை விதிக்கப்பட்டு உள்ளது.