பதிவு செய்த நாள்
05
மே
2016
02:05
உத்தமசோழபுரம்: அக்னி நட்சத்திரம் என்ற கத்திரி வெயில் காலத்தில், சிவாலய கருவறையில் உள்ள மூலவர் ஆவுடையாரை குளிர்வித்தால், நல்ல மழை பொழிந்து கோடையின் உக்கிரம் குறையும் என்ற நம்பிக்கை உள்ளது. அதற்கு, சிவன் கோவில்களில் தாரா பாத்திரத்தில், பன்னீரை நிரப்பி, ஈசன் மீது இடைவிடாது விழும் வகையில் அமைத்து குளிர்விப்பார்கள். அதற்கேற்ப, சேலம் உத்தமசோழபுரத்தில் உள்ள கரபுரநாதர் கோவிலில், மூலவர் ஆவுடையார் மேல் வெட்டிவேர்களால் பின்னப்பட்ட பந்தல் அமைத்து, அதன் கீழ், தாரா பாத்திரம் வைத்துள்ளனர். அதில் ஏலக்காய், கிராம்பு, பச்சை கற்பூரம் மற்றும் பலவித மூலிகைகளை அரைத்து வைத்து, தூய பன்னீரால் நிரப்பி, ஈசன் மீது இடைவிடாது கொட்டி அபி?ஷகம் செய்து, அவரை குளிர்விக்கும் வகையில் அமைத்துள்ளனர்.