பதிவு செய்த நாள்
09
மே
2016
12:05
சென்னை : பூஜ்யஸ்ரீ காஞ்சி காமகோடி மஹா பெரியவர் ஜகத்குரு சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகளின், 125வது ஜெயந்தி விழா, ஸ்ரீஜெயேந்திர சரஸ்வதி, விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் ஆசியுடன், அனுஷ நட்சத்திரம் கூடிய சுபதினமான மே 22ல், காந்தி ரோடு, மருது பாண்டியன் திருமண மண்டபத்தில் மன்னார்குடி நகரில் நடக்கிறது. காலை, 5:00 மணிக்கு, கணபதி ஹோமமும், கஜ பூஜை, கோ பூஜை நடக்கிறது. காலை 8:00 மணிக்கு, ஷோடஸி, சுவிஸினி, தம்பதி கன்யா, வடுகன் பூஜைகள் நடக்கின்றன. மதியம் 2:00 மணிக்கு, மஹாசண்டி ஹோமமும், உலக நன்மைக்காக, மாலை, 6:00 மணிக்கு, பூர்ணாஹூதி நடக்கிறது.