சிறுபாக்கம் செங்குந்தர் மட வளாகத்தில் உள்ள பிச்சாண்டவர் கோவிலில் அமுது படையல் எனும் அன்னப்படையல் விழா நடந்தது. இதையொட்டி, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாலை பிச்சாண்டவர் சுவாமி பூக்களால் அலங்கரித்த தேரில் வீதியுலா வந்து அருள்பாலித்தார். இரவு சிறுதொண்ட நாயனார் நாடகம் நடந்தது. ஏராளமானோர் தரிசனம் செய்தனர்.