பதிவு செய்த நாள்
10
மே
2016
12:05
ராசிபுரம்: ராசிபுரம் அருகே, மாரியம்மன் கோவில் திருவிழா துவங்கியது. நாமக்கல் மாவட்டம், ராசிபுரம் அடுத்த, தோனமேடு சமயபுரம் மாரியம்மன் கோவில் திருவிழா நேற்று துவங்கியது. இதையடுத்து, அதிகாலை, 3 மணிக்கு தோனமேட்டில் இருந்து புறப்பட்டு, கண்ணனூர் மாரியம்மன் கோவிலுக்கு பூ போடுதல் நிகழ்ச்சி நடந்தது. இன்று காலை, 8 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு பூஜை நடக்கிறது. பின், அக்னிகரகம் எடுக்கும் நிகழ்ச்சியும், மாலை, 3 மணிக்கு பொங்கல் வைக்கும் நிகழ்ச்சியும் நடக்கிறது. மாலை, 6 மணிக்கு மாவிளக்கு ஊர்வலமும், இரவு, 7 மணிக்கு மகாபூஜையும் நடக்கிறது. சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு சுவாமி அருள்பாலிக்கிறார். நாளை (11ம் தேதி) காலை, 9 மணிக்கு மஞ்சள் நீராடுதல் நிகழ்ச்சியும், இரவு, 7 மணிக்கு கருப்பனார் பூஜையும் கோலாகலமாக நடக்கிறது.