பதிவு செய்த நாள்
13
மே
2016
10:05
மீஞ்சூர்: மீஞ்சூர் வரதராஜ பெருமாள் கோவில் புதிய தேர் வெள்ளோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. மீஞ்சூர், வரதராஜ பெருமாள் கோவிலில் உள்ள, தேர் சிதிலமடைந்து இருந்தது.<இந்நிலையில், 2014ல், புதிய தேர் அமைக்கும் திருப்பணிகள் துவங்கின. ஆனால், நிதி ஆதாரம் இல்லாதது, உள்ளிட்ட காரணங்களால், பணிகள் முடிவடையாமல் இருந்தன. இதுகுறித்து, கடந்த,பிப்.18ம் தேதி, நமது நாளிதழில், படத்துடன் செய்தி வெளியானது. இதையடுத்து, தேர் திருப்பணிகள் நடந்து, புதிய தேர் வெள்ளோட்டம் நடைபெற்றது. புதிய தேர் வெள்ளோட்டத்தின்போது, ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டுதேரை வடம் பிடித்து இழுத்தனர்.