பதிவு செய்த நாள்
14
மே
2016
12:05
திருப்பூர்: திருப்பூர் ஸ்ரீவிஸ்வேஸ்வரர், ஸ்ரீவீரராகவப் பெருமாள் கோவில்களின், வைகாசி விசாகத் தேர்த்திருவிழா இன்று துவங்குகிறது; 21, 22ல், தேரோட்டம் நடைபெற உள்ளது. திருப்பூர் ஸ்ரீவிஸ்வேஸ்வரர் மற்றும் ஸ்ரீவீரராகவப் பெருமாள் கோவில்களில், வைகாசி விசாகத் தேர்த்திருவிழா இன்று துவங்குகிறது. காலை சிறப்பு பூஜை; மாலை, 6:00 மணிக்கு, காவல் தெய்வமான செல்லாண்டியம்மன் கோவிலில் விசேஷ பூஜை, கிராம சாந்தி நிகழ்ச்சி நடக்கிறது. நாளை மாலை, 6:30 மணிக்கு கொடியேற்றம், தினமும் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம், அதிகாரநந்தி, சேஷ வாகனம், கற்பக விருட்ஷம் வாகனங்களில் சுவாமி எழுந்தருளி, வீதி உலா நடக்கிறது. வரும், 19ல், பஞ்சமூர்த்திகள் புறப்பாடு, எம்பெருமான் கருட வாகனத்தில் வீதி உலா நடக்கும். 20ல் திருக்கல்யாணம்; 21ம் தேதி காலை, சுவாமிகள் தேரில் எழுந்தருளும் நிகழ்ச்சி நடக்கிறது. அன்று மாலை, 3:00 மணிக்கு, ஸ்ரீவிஸ்வேஸ்வரர் கோவில் தேரோட்டம்; 22ல் ஸ்ரீவீரராகவப் பெருமாள் கோவில் தேரோட்டம் நடைபெற உள்ளது. தொடர்ந்து, பரிவேட்டை, தெப்பத்திருவிழா, மகா தரிசனம், மலர் பல்லக்கு ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. 27ல் விடையாற்றி உற்சவத்துடன், தேர்த்திருவிழா நிறைவடைகிறது.