பதிவு செய்த நாள்
14
மே
2016
12:05
சென்னை: மயிலாப்பூர், வெள்ளீஸ்வரர் கோவிலில், வைகாசி திருவிழாவின் மூன்றாம் நாளான இன்று, அதிகார நந்தி வாகனத்தில், சுவாமி வீதியுலா நடக்கிறது. மயிலாப்பூர், வெள்ளீஸ்வரர் கோவிலில், வைகாசி திருவிழா நடைபெறுகிறது. இரண்டாம் நாளான, நேற்று காலை, சுவாமி சூரியவட்டம் வாகனத்திலும், இரவு சந்திர வட்டம் வாகனத்திலும் வீதியுலா வந்தார். வைகாசி மாத பவுர்ணமி வரை நடைபெறும், இத்திருவிழாவில், தினமும் காலை மற்றும் இரவில் வீதியுலா நடைபெறும். மூன்றாம் நாளான இன்று, காலை, 6:00 மணிக்கு, அதிகார நந்தி வாகனத்தில் சுவாமி வீதியுலா நடைபெறுகிறது.