சாயல்குடி: சாயல்குடி அருகே கூராங்கோட்டை தர்மமுனீஸ்வரர் கோயிலில் வருடாபிஷேகம் நடந்தது. தர்மமுனீஸ்வரர் புஷ்ப அலங்காரத்துடன் பச்சைப் பல்லக்கில் எழுந்தருளி குண்டாறு சென்று வேட்டையாடுதல் நிகழ்ச்சி நடந்தது. ஏராளமான பக்தர்கள் பால்குடம், காவடி, அக்னிச்சட்டி எடுத்து நேர்த்திகடன் செலுத்தினர். அன்னதானம் வழங்கபட்டது.