மேலுார்: மதுரை திருவாதவூர் திருமறைநாதர் கோயில் வைகாசி திருவிழாவையொட்டி, தேரோட்டம் நேற்று நடந்தது. நேற்றுமுன்தினம் திருக்கல்யாணம் நடந்தது. தேரோட்டத்தில் மேலுார், திருவாதவூர், கொட்டகுடி, பூஞ்சுத்தி உள்ளிட்ட பல கிராமங்களை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேர் நிலைக்கு வந்ததும் அம்மன், சுவாமிக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது. டி.ஆர்.ஓ., வேலுச்சாமி, தாசில்தார் கிருஷ்ணன், மீனாட்சி கோயில் இணை கமிஷனர் நடராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.