குறிச்சி: வெள்ளலுார் கரிவரதராஜபெருமாள் கோவில், இரு ஆண்டுகளுக்கு முன் கட்டுமான பணிகள் மேற்கொள்ளப்பட்டு, கும்பாபிஷேகம் நடந்தது. இதன் இரண்டாமாண்டு விழா, நேற்று காலை நடந்தது. இதையொட்டி, கரிவரதராஜபெருமாளுக்கு திருமஞ்சனம் பூசப்பட்டது. சக்கரத்தாழ்வார், யோக நரசிம்மர் ஆகியோருக்கும் விசேஷ பூஜை நடந்தது. மாலை வரை நடந்த பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளில், திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.