காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் சன்னிதி தெரு சந்தவெளி அம்மன் கோவில் சித்திரை திருவிழாவில், நேற்று, 108 பால்குட ஊர்வலம் நடைபெற்றது. காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் சன்னிதி தெருவில் உள்ள சந்தவெளி அம்மன் கோவில் சித்திரை திருவிழா கடந்த வெள்ளிக்கிழமை துவங்கியது. தினமும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. நேற்று மூன்றாம் நாள் காலை, 8:00 மணிக்கு பக்தர்கள், 108 பேர், பால்குடம் எடுத்து சன்னிதி தெரு, கற்பக விநாயகர் கோவில் தெரு, நிமந்தகார தெரு, புத்தேரி தெரு ஆகிய பகுதி வழியாக ஊர்வலம் வந்து கோவிலுக்கு சென்றனர். மதியம், அம்மனுக்கு அபிஷேகம், பொங்கலிடுதல் போன்றவை நடைபெற்றன. இரவில், அம்மன் ஊர்வலம் நடைபெற்றது.