புதுச்சேரி: கருவடிக்குப்பம் வேதாஸ்ரம குருகுலத்தில் ஸ்ரீ சந்திரசேகர சரஸ்வதி சுவாமிகள் ஜெயந்தி விழா நேற்று நடந்தது. புதுச்சேரி பிராமண சமூக சேவை சங்கம் மற்றும் சாய் சங்கர பக்த சபா, கோசம்ரஷக்னா எஜிகேஷனல் சேவா டிரஸ்ட் சார்பில், ஸ்ரீ சந்திரசேகர சரஸ்வதி சுவாமிகள் ஜெயந்தி விழா நேற்று நடந்தது. அதையொட்டி, புதுச்சேரி கருவடிக்குப்பம் ஓம் சக்தி நகரில் உள்ள வேதாஸ்ரம குருகுலத்தில் நேற்று மாலை 4:00 மணிக்கு கோ பூஜை, அஸ்வ பூஜை, ஆவ ஹந்தி ஹோமம், சுவாமியின் திருவுருவப்படத்துடன் வேதபாராயணம், பஜனையுடன் வீதி உலா நடந்தது. அதைத்தொடர்ந்து அன்னதான பிரசாதம் வழங்கப்பட்டது. ராஜா சாஸ்திரிகள், கல்யாணம், சுரேஷ், வேதராமன் ஆகியோர் முன்னிலை விழா நடந்தது. ஏற்பாடுகளை சாய்சங்கர பக்த சபா நிறுவனர்கள் அருணாச்சலம், சுப்புலட்சுமி செய்திருந்தனர்.