கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அடுத்த, பர்கூர்-திருப்பத்தூர் சாலையில், பிரசித்தி பெற்ற மகாசாந்த காளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் வைகாசி மாத திருவிழா நேற்று முன்தினம் நடந்தது. விழாவையொட்டி, காளியம்மனுக்கு சிறப்பு அலங்காரம், பூஜைகள், அபிஷேக ஆராதனை நடந்தது. இதையடுத்து, பர்கூர் மற்றும் மல்லப்பாடி பகுதிகளில் அம்மன் திருவீதி உலா நடந்தது. இதில், திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.