பதிவு செய்த நாள்
24
மே
2016
11:05
திருவாலங்காடு: திரவுபதியம்மன் கோவிலில் நடந்த தீமிதி திருவிழாவில், 2,000 பக்தர்கள் காப்பு கட்டி தீ மிதித்தனர். திருவாலங்காட்டில் உள்ள திரவுபதியம்மன் கோவிலில், இந்தாண்டிற்கான தீமிதி திருவிழா, கடந்த, 8ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும் சிறப்பு பூஜைகள், மகாபாரத சொற்பொழிவு மற்றும் இரவு நாடகமும் நடந்து வந்தது. நேற்று முன்தினம் காலை, துரியோதனன் படுகளம் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து, திரளான பெண்கள் பொங்கல் வைத்து வழிபட்டனர். மாலை, 6:00 மணிக்கு, அக்னி குண்டத்தில், 2,000 பக்தர்கள் காப்பு கட்டி தீ மிதித்தனர். இரவு, உற்சவர் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.