பதிவு செய்த நாள்
24
மே
2016
12:05
கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு பொன்மலை வேலாயுதசாமி கோவிலில், வைகாசி விசாகத்தை ஒட்டி சஷ்டி குழுவினர் பால் குடம் எடுத்து வந்து சுவாமியை வழிபட்டனர். இந்த ஆண்டு வைகாசி விசாகத்தை ஒட்டி, அக்குழுவைச்சேர்ந்த, 60 பக்தர்கள் பால் குடம் எடுத்து வந்து, மலை அடிவாரம் பாத விநாயகர் கோவில் வந்தனர். பால்குட ஊர்வலத்தை பரம்பரை அறங்காவலர் சண்முகசுந்தரி வெற்றிவேல் கோப்பண்ண மன்றாடியார் துவக்கி வைத்தனர். தொடர்ந்து, அவர்கள் காவடி, மேள, தாளங்களுடன் ஊர்வலமாக ஆர்.எஸ்.ரோடு, திரு.வி.க., விவேகானந்தர் வீதி, பொள்ளாச்சி- கோவை மெயின்ரோடு, சிவலோகநாதர் கோவிலுக்கு சென்று விட்டு, பொன்மலையை சுற்றி கிரிவலம் வந்தனர். பின் மலை மேல் சென்று, வேலாயுதசாமிக்கு பால் அபிஷேகம் செய்தனர். சஷ்டி குழுத் தலைவர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் பக்தர்கள் சஷ்டி பாராயணம் செய்தனர். இதில், கிணத்துக்கடவு மற்றும் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். பின்னர், அக்குழு சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.