உசிலம்பட்டி பத்ரகாளியம்மன் கோயில் வைகாசி பொங்கல் விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
25மே 2016 12:05
உசிலம்பட்டி: உசிலம்பட்டி பத்ரகாளியம்மன் கோயில் வைகாசி பொங்கல் விழா நடந்தது. பக்தர்கள் முளைப்பாரி, மாவிளக்கு, பொங்கல், அக்னிச்சட்டி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். ராமலிங்க சவுடேஷ்வரி அம்மன் திருவிழாவில் கரகம் எடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. மாதரையில் இருந்து கரகம் எடுத்து வந்து விழா நடத்தினர். வழியில் பக்தர்கள் அம்மன் கரகத்தின் முன்பாக தங்கள் உடலில் கத்தி போட்டு நேர்த்திக்கடன் செலுத்தினர். தொடர்ந்து முளைப்பாரி, மாவிளக்கு, பொங்கல் வைத்து வழிபாடுகள் நடத்தினர். நாட்டாபட்டி பத்ர காளியம்மன் கோயில் திருவிழாவில் பக்தர்கள் ரத்ததான முகாம் நடத்தினர்.