காரைக்கால்: காரைக்கால் மஸ்தான் சாகிப் வலியுல்லாஹ் தர்கா கந்தூரி விழாவில் மின்சார சந்தனக்கூடு ஊர்வலம் நடந்தது. காரைக்கால் மஸ்தான் சாகிப் வலியுல்லாஹ் தர்கா ஷரிப் 193வது ஆண்டு கந்தூரி விழா கடந்த 17ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. அன்று பகல் ரதம், பல்லாக்கு ஊர்வலம் நடந்தது. அதைத் தொடர்ந்து நேற்று முன்தினம் இரவு 11.30 மணிக்கு ஹலபு என்னும் போர்வை வீதி உலா நடந்தது. இரவு 12.30 மணிக்கு மின்சார சந்தனக்கூடு வீதி உலா துவங்கியது. அதிகாலை 4 மணிக்கு சந்தனம் பூசுதல் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில் அசனா எம்.எல்.ஏ., முன்னாள் எம்.எல்.ஏ., நாஜிம் உள்ளிட் டோர் கலந்து கொண்டனர். நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். வரும் 29ம் தேதி கொடி இறக்கம் நிகழ்ச்சி நடக்கிறது.