பதிவு செய்த நாள்
28
மே
2016
10:05
காரைக்கால்: காரைக்கால் அம்பகரத்தூர் பத்ரகாளியம்மன் கோவிலில், மகிஷ சம்ஹார நினைவுப் பெருவிழாவை முன்னிட்டு, திருத்தேர் வீதியுலா நடந்தது. காரைக்கால் திருநள்ளாரை அடுத்த அம்பகரத்தூரில் உள்ள பிரசித்திப் பெற்ற பத்ரகாளியம்மன் கோவிலில் மகிஷ சம்ஹார நினைவுப் பெருவிழா, கடந்த 4ம் தேதி, அம்மனுக்கு பூர்வாங்க அபிஷேக ஆராதனைகள் மற்றும் காப்புக் கட்டுதலுடன் தொடங்கியது. விழாவை முன்னிட்டு, தினத்தோறும், அம்மன் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதியுலா நடந்தது. கடந்த 16ம் தேதி, மகா மாரியம்மன் தீமிதி திருவிழாவும், 23ம் ÷ ததி, பத்ரகாளியம்மன் புஷ்ப பல்லக்கு உற்சவமும் நடந்தது. பத்ரகாளியம்மன் திருத்தேரில் வீதியுலா நேற்று முன்தினம் இரவு நடந்தது. வரும் 31ம் தேதி உதிரவாய் உற்சவம், அபிஷேக ஆராதனையுடன் நடக்க உள்ளது. விழா ஏற்பாடுகளை, கோவில் நிர்வாக அதிகாரி பன்னீர்செல்வம்,சிறப்பு அதிகாரி சண்முகசுந்தரம் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.