சிவகங்கை : ஆடு, கோழி வெட்ட தடை விதிக்கும் பொருட்டு, கோயில்கள் குறித்த விபரங்களை உளவுத்துறை போலீசார் சேகரித்து வருகின்றனர். கோயில்களில் ஆடு, கோழி பலியிட கடந்த 2001ல் அ.தி.மு.க., அரசு தடை விதித்தது. 2006க்கு பின் வந்த தி.மு.க., அரசு இதை கண்டு கொள்ளவில்லை. இதனால் கோயில்களில் சுகாதாரக்கேடு ஏற்பட்டது. இதை தவிர்த்து, பக்தர்கள் சுகாதாரமான முறையில் சுவாமி தரிசனம் செய்யும் நோக்கிலும், அதே நேரம் ஆடு, கோழிகளை பலியிட தடை விதிக்கும் நோக்கம் அரசுக்கு இல்லை என்றாலும், சுகாதாரம் கருதி மீண்டும் இவைகளை பலியிட அரசு தடை விதிக்கலாம் என தெரிகிறது. சர்வே:இதற்காக, மாநில அளவில் உள்ள கோயில்களில் ஆடு, கோழிகளை பலியிடும் கோயில்கள் குறித்த விபரங்களை சேகரித்து அனுப்புமாறு, உளவுத்துறை போலீசாருக்கு டி.ஜி.பி., உத்தரவிட்டுள்ளார்.