திருக்கோவிலுார்: திருக்கோவிலுார்‚ கீழக்குவீதி ஆஞ்சநேயர் கோவிலில் ராதா திருக்கல்யாண வைபவம் நடந்தது. திருக்கோவிலுார்‚ கீழக்கு வீதியில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலில் கடந்த 23ம் தேதி ராமநவமி விழா துவங்கியது. முக்கிய நிகழ்சியாக தினசரி பரனுார் கிருஷ்ணப்ரேமி சுவாமிகளின் உபன்யாசம்‚ நடராஜசர்மாவின் ஸ்ரீ மத் ராமாயண நவாஹ மூல பாராயணம் நடந்தது. விழாவின் இறுதி நாளான 31ம் தேதி காலை ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு விசேஷ திருமஞ்சனம்‚ மாலை 6:00 மணிக்கு திவ்யநாம பஜனை நடந்தது. நேற்று காலை 8:00 மணிக்கு உஞ்சர்த்தி பஜனை மற்றும் ராதா திருக்கல்யாண வைபவம் நடந்தது. ஜீயர் ஸ்ரீ நிவாச ராமானுஜாச்சாரிய சுவாமிகள் உத்தரவின் பேரில் சத்சங்க நிர்வாகிகள் விழாவிற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.