பதிவு செய்த நாள்
07
ஜூன்
2016
11:06
ஊத்துக்கோட்டை: கோதண்டராம சுவாமி கோவிலில், 10 நாட்கள் நடைபெறும் பிரம்மோற்சவம், நாளை (8ம் தேதி) துவங்குகிறது. எல்லாபுரம் ஒன்றியம், பெருமுடிவாக்கம் கிராமத்தில் உள்ளது, சீதா லட்சுமண அனுமத் சமேதரான கோதண்டராம சுவாமி கோவில். இக்கோவிலில், ஒவ்வொரு ஆண்டும், வைகாசி மாதம், 10 நாட்கள் பிரம்மோற்சவ விழா நடைபெறுவது வழக்கம். இந்தாண்டு, இவ்விழா நாளை துவங்க உள்ளது. இதையொட்டி, ஒவ்வொரு நாளும், காலை, இரவு நேரங்களில் உற்சவர் வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.