ஊத்துக்கோட்டை வீராஞ்சநேயர் கோவிலில் தீமிதி திருவிழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
08ஜூன் 2016 11:06
ஊத்துக்கோட்டை: வீராஞ்சநேய சுவாமி கோவிலில், அனுமன் ஜயந்தியை ஒட்டி நடந்த தீமிதி திருவிழாவில் திரளான பக்தர்கள் காப்பு கட்டி தீ மிதித்தனர்.
பூண்டி ஒன்றியம், வெலமகண்டிகை கிராமத்தில் உள்ளது, வீராஞ்சநேய சுவாமி கோவில். இக்கோவிலில், ஒவ்வொரு ஆண்டும் வைகாசி மாதம், அனுமன் ஜயந்தியை ஒட்டி தீமிதி திருவிழா நடைபெறுவது வழக்கம். நேற்று முன்தினம் நடந்த தீமிதி திருவிழாவில், வெலமகண்டிகை, பென்னலுார்பேட்டை மற்றும் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த, 300க்கும் மேற்பட்ட பக்தர்கள் காப்பு கட்டி தீ மிதித்தனர். பின், உற்சவர் வீராஞ்சநேயர் சிறப்பு அலங்காரத்தில் வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.