பதிவு செய்த நாள்
10
ஜூன்
2016
12:06
பெ.நா.பாளையம்: காளப்பநாயக்கன்பாளையத்தில் உள்ள அத்தனுார் அம்மன் கோவிலில் ஆண்டு விழா நடந்தது. சோமையம்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட காளப்பநாயக்கன்பாளையத்தில், கடந்த ஆண்டு, அத்தனுார் அம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. முதலாம் ஆண்டு விழாவையொட்டி, சிறப்பு பூஜைகள் நடந்தன. கோவில் நிர்வாகி ராமலிங்கம் முன்னிலை வகித்தார். விழாவில், உலக நலம் வேண்டி, வேள்வி, வழிபாடு, மகா அபிஷேகம் ஆகியன நடந்தன. சிறப்பு அலங்காரத்துடன் பேரொளி வழிபாடும் நடந்தது. மதியம் அன்னதானம், மாலை திருவிளக்கு வழிபாடுகள் நடந்தன. வழிபாடு நிகழ்வுகளை, சிரவை ஆதீன அருட்பணி மன்ற உறுப்பினர்கள் நடத்தினர். நிகழ்ச்சியில், சிரவை ஆதீனம் குமரகுருபர சுவாமிகள், பேரூராதீனம் இளைய பட்டம் மருதாசல அடிகளார், தென்சேரிமலை முத்துசிவராமசாமி அடிகளார், பிள்ளையார் பீடம் பொன்மணிவாசக அடிகளார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.